0 of 25 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
01. உடல் சிவப்பு, வாய் திறந்திருக்கும், உணவு காகிதம், அது என்ன?
02. நான்கு கால்கள் கொண்டவன், ஆனால் இவனுக்கு வால் கிடையாது. இவன் யார்?
03.பாடுவான் ஆடமாட்டான், பேசுவான் அசையமாட்டான். அவன் யார்?
04. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கமல்ல, அது என்ன?
05. ஈட்டிப்படை வென்று காட்டுப்புதர் கடந்து, இனிமையான புதையலைக் கண்டெடுக்கலாம். அது என்ன?
06. கண்ணுக்கு அலங்காரம், பார்வைக்கு உத்தரவாதம், அது என்ன?
07. உலகமெல்லாம் உறங்கிவிடும். ஆனால் இவர்கள் மட்டும் உறங்கமாட்டார்கள். இவர்கள் யார்?
08. ஏற முடியாத இடத்தில் எட்டப் பறக்கும் பனித்துளி. அது என்ன?
09. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல. உருண்டு ஓடி வரும் பந்து அல்ல. அது என்ன?
10. விடிந்தவுடன் வேலை செய்வான், வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான் அவன் யார்?
11. கடல் நீரால் வளர்வான், மழை நீரால் மறைவான் அவன் யார்?
12. இணைபிரியமாட்டார்கள், நண்பர்களல்லர், ஒன்று சேரமாட்டார்கள் பகைவர்களல்லர், அவர்கள் யார்?
13. மெல்லியதாய் இருக்கும், தண்ணீரில் மிதக்கும், ஆயிரம் பேர் சேர்ந்தாலும் அதனைத் தூக்க முடியாது. அது என்ன?
14. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர், இது என்ன?
15. மரத்தில் தொங்கும் இனிப்புப் பொட்டலத்திற்கு காவலர்களே அதிகமாம். அது என்ன?
16. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
17. ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன?
18. படபடக்கும், பளபளக்கும் பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன?
19. முகத்தைக் காட்டுவான், முதுகைக் காட்டமாட்டான், அவன் யார்?
20. ஊரைச் செழிக்க வைத்து, உல்லாச நடை பயின்று, வளைந்து குழுங்கி வையகமெல்லாம் சுற்றி வருவாள் ஒரு வனிதை, அவள் யார்?
21. உலகில் மெலிந்தவன், உடைகளைக் காப்பவன். அவன் யார்?
22. சின்னப் பெட்டிக்குள் கீதங்கள் ஆயிரம், ஆயிரம். அது என்ன?
23. எல்லை இல்லா அழகி, எட்டி நிற்கும் இரும்பையும் கவர்ந்து தன்பால் இழுப்பாள். அவள் யார்?
24. ஐந்து அடுக்கு, நாலு இடுக்கு அது என்ன?
25. ஓடிப் படர்வேன் கொடியல்ல, ஒளி மிகவுண்டு நிலவுமல்ல, மனைகளை அலங்கரிப்பேன் மலரல்ல, அது என்ன?